Author Topic: தலைக்கு 'பெயிண்ட்' அடிக்கப் போறீங்களா?...பார்த்துப் பண்ணுங்க  (Read 970 times)

Offline RemO

பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூந்தல் அலங்காரம் என்பது அழகாய் சடைபின்னி பூ வைத்து போடுவதுதான். அப்புறம் அதுவே பல வித ஸ்டைல் சடைகளாக மாறியது. பின்னர் போனிடெய்ல் பிரபலமானது. சில வருடங்களில் கூந்தலை கிளிப் மட்டுமே மாட்டி அப்படியே ப்ரியாக விடுவது பேஷனாகிப் போனது. கருங்கூந்தல்தான் அழகு என்ற நிலை மாறி பலவித நிறங்களில் கூந்தலை கலர் செய்யும் ட்ரெண்டு இப்போது புகுந்துள்ளது. இந்த ஹேர் கலரிங் பலவித வண்ணங்களில் கிடைகின்றன. அவற்றில் தரமானதை உபயோகித்தால் மட்டுமே ஆரோக்கியமானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அதற்கான குறிப்புகளையும் கொடுத்துள்ளனர்.

நிரந்தர வர்ணங்கள்

ஹேர் கலரிங்’ செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்ளுவதா அல்லது தற்காலிக மாக செய்து கொள்ளுவதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். நரை முடியை மறைப்பதற்காக கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுக்கலாம். ஒட்டுமொத்த கூந்தலையுமே கலரிங் செய்துகொள்வதா அல்லது ஹை லைட் மட்டும் செய்து கொள்வதா என்பதையும் தீர்மானிக்கவேண்டும்.

நிரந்தர கலரிங் செய்வதற்காக ஜெல், மற்றும் பிற பொருட்களும், செமி பெர்மனெட் கலரிங் செய்வதற்காக மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர்.

சிவப்பு நிறம் வேண்டாம்


தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது.

ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்பு கிறவர்கள், காப்பர் அல்லது சிவப்புநிறம் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை கொண்டது. பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, அழகியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குட்டையான கூந்தல் அழகு

கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு ஹேர் கலரிங் செய்தால் மிக அழகாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கல ரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர்.

கூந்தல் வல்லுநர்கள்

ஹேர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். கலரிங் செய்த பின், அதற்கென உள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனர் களையே பயன்படுத்த வேண்டும். ஹேர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் பொருட்கள் தரமானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது. ஏனெனில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

தரமற்றவைகளால் ஆபத்து

பென்சின் கலக்கப்பெற்ற அழகு சாதன பொருட்கள் பயன்படுத்த வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அவை எளிதில் கிடைக்கின்றன. இவை புற்றுநோய் மட்டுமல்லாது தோல்நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

எனவே அவசியமற்ற தருணங்களில் தலைமுடிக்கு வண்ணம் தடவுவதையும் தரமற்ற செயற்கை மருதாணி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் ஆலோசனை.