குடையோடு அவளும்
மழையோடு நானும்
முகில் மூடிய நிலவாக
குடைக்குள்ளே அவள் முகம்
கருணையாய்வந்த காற்று
பறித்துக் கொண்டது
நான் எதிர் பார்த்தது போல
அவள் குடையை
மழையில் அவள் நனைய
குளிரில் நடுங்கியது
என் தேகம்
ஆனந்தமாய் அவளைத் தழுவும்
மழையைக் கண்டு
கோபத்தால் வெப்பபடைந்தது
என் தேகம்
மழையில் நனைந்த அவள்
உடல் கண்டு
சாலையோர மரங்கள் கூட
உடல் சிலிர்த்தன
ஈர மணலில் பதிந்த அவள்
கால்தடங்களை முத்தமிட்டு தழுவிச் சென்றது
வீதியில் ஓடிய மழைநீர்