சின்ன சிறு எறும்பே ...
சுறு சுறுப்பின் சிகரமே ...
உன்னை கண்டால் பொறாமை கொள்கிறேன் ...
சிறு துளையிலும் நுழைவாய் ...
அது உனக்கு சுலபமே...
பெரிய துவரம் உங்களுக்கு கால் தூசு..
உன்னை போல் ஒற்றுமை யாரிடத்திலும் இல்லை ..
ஒன்றாக அனைத்தும் செய்வீர் ..
கோடை காலம் வெயில் காலம் உனக்கு தெரியேல்..
உன் குடும்பத்திக்காக உணவு சேர்ப்பீர்..
ஆறு சுவையிலும் இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு, கசப்பு,கரிப்பு,காரம்..
சுவைக்கும் போது இணைந்தே உண்பிர்..
களிறின் எதிரி நீயே ஆகும்...
பெரிய உருவமும் உன்னை பார்த்தால்..
பயந்து நடு நடுங்கும்..
பயமே வராதது ஏன்? ..
நான்
எதையும் செய்வேன் என்ற உறுதியான என்னமா..
நாங்கள் ஒன்று சேர்த்தால் பெரிய மலை என்ன ,
மலையும் கற்களாய் மாறும்..
கற்கள் மணலாய் மாறும்...
எங்களின் நம்பிக்கை,
எங்கள் மனோபலம்
ஒற்றுமை எங்கள் அடையாளம்...
நன்றி ..