Author Topic: நடுத்தர வர்க்கம்  (Read 380 times)

Offline thamilan

நடுத்தர வர்க்கம்
« on: September 30, 2016, 05:34:30 PM »
ரெண்டு படி ஏறினால்
நாலு படி சறுக்கும்

ரெண்டு ரூபாய் வரவுக்கு
இருபது ரூபாய் செலவிருக்கும்

ஒருவாய் சோற்றுக்கு
அஞ்சு வயிறு காத்திருக்கும்

பழைய புடவை
தாவணியாகி
பாவாடையாகி
சட்டையாகி
பிளவுசாகும் வரை அவதாரமெடுக்கும்

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமல்
அதே ஏணிப்படியில் நிற்கும்

மேல்த்தர வர்க்கம்
எல்லாம் அவர் வசம்
கீழ்த்தர  வர்க்கம்
எல்லாம் இலவசம்
நடுத்தர  வர்க்கம்
எல்லாம் விதிவசம்!!!!!
   

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: நடுத்தர வர்க்கம்
« Reply #1 on: October 04, 2016, 12:10:02 PM »


அருமை .....!!!
வாழ்த்துக்கள் நண்பரே ...!!!