Author Topic: ~ ஸ்ட்ராபெரி கப் கேக் செய்வது எப்படி? ~  (Read 382 times)

Offline MysteRy

ஸ்ட்ராபெரி கப் கேக் செய்வது எப்படி?



அழகிய கப் கேக்கள் என்றுமே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த கப் கேக்குகளை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம். அதேசமயத்தில் வியாபாரமாகவும் செய்யலாம். வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.


கப் கேக்

1 1/2 கப் மாவு

1 12/2 தேக்கரண்டி பேகிங் பவுடர்

1/2 தேக்கரண்டி உப்பு

1/2 கப் பட்டர்

1 கப் சீனி

1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸன்ஸ்

2 முட்டை

1 கப் பால்

தோப்பிங்

4 முட்டை வெள்ளைக் கரு

1 கப் சீனி

தேவையான அளவு உப்பு

செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் மாவு, பேகிங் பவுடர் மற்றும் உப்பை ஒன்றாக கலக்கவும். இன்னொரு பாத்திரத்தில் பட்டர் மட்ரும் சீனியை ஒன்றாக கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதன்பிறகு வென்னிலா எஸ்ஸன்ஸ் மட்ரும் முட்டையை ஒன்றாக சேர்த்து அடிக்கவும்.
இதனுடன் கலந்து வைத்த மாவு மற்றும் பாலை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து அடித்துக் கொள்ளவும்
அடித்த இந்த கலவையை கப் கேக் பாத்திரத்தில் ஊற்றி 350 டிகிரி செல்சியசில் 30 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.

தோப்பிங் செய்யும் முறை

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் மற்றும் சீனியைக் கலந்து அடிக்கவும்.
இந்தக் கலவையை பனிச் சாரல் போன்ற வடிவத்தில் செய்து 225 டிகிரி செல்சியசில் வேகவைக்கவும்.
அதன் பின் கேக் மீது விப்பிங் கிரீம் தடவி இந்த தோப்பிங்கையும் ஸ்ட்ராபெரி துண்டுகளையும் அழகாக அடுக்கவும்.