Author Topic: ~ கேரட் மில்க் ஷேக் ~  (Read 306 times)

Offline MysteRy

~ கேரட் மில்க் ஷேக் ~
« on: September 09, 2016, 10:40:48 PM »
கேரட் மில்க் ஷேக்



தேவையான பொருட்கள்:

 துண்டுகளாக்கப்பட்ட கேரட் – 3/4 கப் பாதாம் – 16 பால் – 2 கப் ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்பு அதில் கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து விட்டு, கலவையை நன்கு குளிர வைக்கவும். பிறகு பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இறுதியில் மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை அடித்து பரிமாறினால், கேரட் மில்க் ஷேக் ரெடி!!!