Author Topic: ~ எள் பர்ஃபி ~  (Read 376 times)

Offline MysteRy

~ எள் பர்ஃபி ~
« on: August 31, 2016, 10:00:24 PM »
எள் பர்ஃபி



தேவையானவை:

எள் 1 கப்
வேர்க்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 2 கப்
ஏலத்தூள் சிறிதளவு

செய்முறை:

எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் ‘நற நற’ என்று பொடி பண்ண வேண்டும்.
வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.