Author Topic: ~ நூக்கல் குருமா ~  (Read 325 times)

Online MysteRy

~ நூக்கல் குருமா ~
« on: August 29, 2016, 09:03:58 PM »
நூக்கல் குருமா



நார்சத்து நிறைந்த நூக்கலை பலரும் சமைப்பதே இல்லை. சிலர் சாம்பார் வைப்பதோடு சரி. ஆனால் நூக்கலை பல விதமாய் சமைக்கலாம். உருளை கிழங்கைப் போல இதுலும் வெரைட்டிஸ் செய்யலாம். நூக்கல் உடலுக்கு மிகவும் நல்லது. அஜீரணம், மலச்சிக்கல், சளி, மூச்சு கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நூக்கல் – 2 சிறியது
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எண்ணெயில் வதக்கி அரைக்க:
வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
பச்சை மிளகாய் – 3
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்

அரைக்க:

தேங்காய்த் துறுவல் – 1/4 கப்
கசகசா – 1/2 டீ ஸ்பூன்
சோம்பு – 1/2 டீ ஸ்பூன்
தாளிக்க:
கிராம்பு – 3
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.

* தேங்காயுடன் சோம்பு-கசகசா மட்டும் வறுத்து நைசாக அரைக்கவும்.

* பாத்திரத்தில் நூக்கலை தோல் சீவி துண்டுகளாகி மஞ்சள்தூள்-உப்பு சேர்த்து வேகவிடவும்.

* காய் வெந்ததும் வெங்காயவிழுது-தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

* கடைசியாக தாளித்து சேர்க்கவும்.

* கமகமக்கும் நூக்கல் குருமா ரெடி.