Author Topic: ~ மிளகுக் குழம்பு ~  (Read 403 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227430
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மிளகுக் குழம்பு ~
« on: August 26, 2016, 03:49:24 PM »
மிளகுக் குழம்பு



தேவையான பொருட்கள்:

மிளகு – 50 கிராம்
சீரகம் – 4 டீஸ்பூன்
மல்லி – 3 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
புளி – 1 எலுமிச்சை அளவு
பெருங்காயம் – சிறிது
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.
பின் அவற்றை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளர வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்து கெட்டியாகி, அதில் உள்ள எண்ணெய் தனியாக பிரியும் போது, அதனை இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான மிளகுக் குழம்பு தயார்!!! இந்த மிளகுக் குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.