Author Topic: ~ உருளைக்கிழங்கு சொதி ~  (Read 315 times)

Offline MysteRy

~ உருளைக்கிழங்கு சொதி ~
« on: August 26, 2016, 03:45:43 PM »
உருளைக்கிழங்கு சொதி



தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3
கெட்டியான தேங்காய்ப்பால் – 1 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 6 பல்
பட்டை,லவங்கம்,ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
 
செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, அதன் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வெங்காயம் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். வெங்காயம் வெந்தவுடன் அதில் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி இறக்கவும்.

பின்னர் அதன்மேல் கறிவேப்பிலை சிறிது தூவி பரிமாறலாம். இதனை சப்பாத்தி, தோசை, பூரி, புலாவ் போன்றவற்றிற்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.