Author Topic: ~ கோவைக்காய் குருமா ~  (Read 631 times)

Offline MysteRy

~ கோவைக்காய் குருமா ~
« on: August 14, 2016, 11:11:06 PM »
கோவைக்காய் குருமா



கோவைக்காய் — 200 கிராம்
வெள்ளை கொண்டைக்கடலை — 1 1/2 கப் (இரவே ஊறவைக்கவும்)
தேங்காய் — 1/2 மூடி (நைசாக அரைக்கவும்)
சின்ன வெங்காயம் — 25 என்னம் (பொடியக நறுக்கவும்)
பச்சை மிளகாய் — 1 என்னம் (நீளமாக கீறியது)
தக்காளி — 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
வறுத்து பொடிக்க — 1 :
தனியா — 1 கைப்பிடி
மிளகாய் வத்தல் — 8 என்னம்
கறிவேப்பிலை — 1 இனுக்கு
வறுத்து பொடிக்க — 2 :
பட்டை — 1 என்னம்
கிராம்பு — 4 என்னம்
சீரகம் — 1 டீஸ்பூன்
சோம்பு — 1 டீஸ்பூன்

வறுத்து பொடிக்க — 1 யை வாணலியில் எண்ணைய் ஊற்றி தனித்தனியாக வறுத்து பின் அனைத்தும் சேர்த்து பொடிக்கவும்.
வறுத்து பொடிக்க — 2 யை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
கோவைக்காயை வட்டமாக நறுக்கி கொஞ்சமாக உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.
சுண்டலை தனியாக வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி பின் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
அதனுடன் கோவைக்காய், கொண்டைக்கடலை போட்டு வதக்கி பொடிக்கப்பட்ட மசாலா, மஞ்சள் தூள் போட்டு வதக்கி கொதித்தபின் தேங்காய் ஊற்றி கொதித்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
ரெடி.