சொந்த மகிழ்ச்சிக்காக
சிந்திப்பதை விட்டு விட்டு
மற்றவர் மகிழ்ச்சிக்காக
உழைத்தால் தேடி வரும் ஆனந்தம்
சுவையான வாழ்க்கையை
சுமையாக மாற்றுவதே
சுயநலம்
சுமையை சுவையாய் மாற்றிவிடுகிறது
பொதுநலம்
ஆசையே துயரத்துக்கு காரணம்
என்று அறிந்து சொன்ன
புத்தனுக்கும்
ஓர் ஆசை இருந்தது
அது தான்
ஆசைகள் அற்ற உலகம்!
அப்படிப்பட்ட உயர்ந்த ஆசைகள்
உலகத்திற்கு
எழில் சேர்க்கும்