Author Topic: ~ பாத்தோடு கறி ~  (Read 343 times)

Offline MysteRy

~ பாத்தோடு கறி ~
« on: August 06, 2016, 09:05:46 PM »
பாத்தோடு கறி



தேவையான பொருட்கள் :

கடலைமாவு – 1 கப்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
லவங்கம் – 4,
கறுப்பு ஏலக்காய் – 1,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தயிர் – 1/2 கப்,
பட்டை – 1 துண்டு,
மிளகு – 4-5,
மல்லித்தழை – தேவைக்கு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகாய்த் தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த கலவையை ஊற்றி கிளறி வேக விடவும். இது திரண்டு, வெந்ததும் இறக்கி ஒரு எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். ஆறியதும் 1 இஞ்ச் சதுர துண்டு போடவும்.
மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் தூள்கள், உப்பு, தனியாத்தூள், மீதி உள்ள மிளகாய், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கைவிடாமல் எண்ணெய் பிரியும் வரை வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் கொதித்ததும், கடலை மாவு துண்டுகளை போடவும். சுருண்டு கிரேவியாக வந்ததும் மல்லி தூவி இறக்கவும்.