விதைக்கிறோம்
நீர் தெளிக்கிறோம்
பிறகு?
ஊன்றிய விதை
உயிர்த்தெழக் காத்திருப்பதா
அல்லது
இதை என்னவாயிற்று என்று
தோண்டித் தோண்டிப் பார்ப்பதா?
கடவுளை பணி
உன் பிரார்த்தனைகளை
அவன் காலடியில் இடு
பின்பு காத்திரு
தன் பணியை
இறைவன் செவ்வனே செய்வான்
மனநிறைவே
மகத்தான செல்வம்