Author Topic: ஒரு நிமிடத்தில் ஹெலிகொப்டராகும் ட்ரக்!  (Read 5172 times)

Offline RemO


யுத்தக்களத்தில் துருப்புகளை காவிச்செல்லும் 'ட்ரக்' வண்டிகளை ஹெலிகொப்டராக மாற்றும் புதிய வடிவமொன்றினை அமெரிக்காவின் பென்டகன் பரிசீலித்து வருகிறது. ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் துருப்புகளை காவிச்செல்லும்போது குண்டுத்தாக்குதலுக்கு துருப்புகள் உள்ளாகின்றன. இதனால் பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடுவதால் இதற்கு மாற்று நடவடிக்கைபற்றி பென்டகன் யோசித்தது. அதன் விளைவாகவே இந்த 'பறக்கும் ட்ரக்' வடிவத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த பறக்கும் ட்ரக்கினை செலுத்துவதற்கு விஷேட விமான ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் தேவையில்லை. எந்தவொருவரும் இதனை செலுத்தமுடியும். 'ட்ரக்' போல் பாவிக்கும்பொழுது அவசர தேவையென்றால் ஒரு நிமிடத்திலும் குறைந்த நேரத்தில் அந்த ட்ரக்கினை ஹெலிகொப்டராக மாற்றமுடியும் என்பது இதன் விஷேட அம்சமாகும்.

இந்த எதிர்கால வடிவத்தினை அமெரிக்காவின் பென்டகன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கூடிய சீக்கிரத்தில் இதன் மாதிரிகளை உருவாக்கும் பணிகள் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.