உடன் இருந்தும் உபயோகம்
இல்லாமல் இருக்கும் நண்பர்கள்
உறவினர்களின் பிடியிலிருந்து தப்பி
ஊர்,பேர்,முகம் தெரியாதவர்களிடம்
ஆறுதல் தேடி வருபவர்களுக்கு
அடைக்கலம் தந்தது இந்த அரட்டையரங்கம்..
ஆண் பெண் என்பதை கடந்து
நட்பு என்னும் பாச வலையில்
ஒருவரை ஒருவர் பேசி அறிந்து, புரிந்து
தனிமையில் இருந்து விடுபட்டு
பேச தெரியாதவனை கூட
மனம் விட்டு பேச வைத்தது இந்த அரட்டையரங்கம்..
வருபவர்கள் மனம் கோணாமல்
அனுசரித்து பேசும் நண்பர்கள்
உறவாடும் அண்ணன்,அக்கா,தம்பி,தங்கை
இவை அனைத்தும் நமக்கு கிடைக்குமா
என்று ஏங்கி வருபவர்களுக்கு
சிவப்பு கம்பளம் விரிதி காத்திருக்கும் இந்த அரட்டையரங்கம்..
இங்கு அன்பை காணலாம்,புன்னகையை காணலாம்...
அறிவை காணலாம்,வேகத்தைக் காணலாம்...
விவேகத்தை காணலாம்,பொறுமையைக் காணலாம்...
திறமையை காணலாம்,விடாமுயற்சியைக் காணலாம்...
இவை அனைத்தையும் தவிர
ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காணலாம்..
நண்பர்கள் ஒரு புறம் இருக்க
எப்பொழுதும் மனதிற்கு இதமாய்
எதிர்பார்ப்புகளைச் செவ்வனே புரிந்து
அனைவரும் ரசிக்கும் படி
இசை மழையில் நனைய வைக்கும்
FTC Fm எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
தோள் கொடுக்க நண்பனும்
கை கொடுக்கும் உறவுகளும்
கொடுத்து என்னை இன்ப
வெள்ளத்தில் ஆழ்த்திய FTC யே
நீர் வாழ்க.. மென்மேலும் வளர்க..
அனைவருக்கும் சந்தோசம் தருக !!