Author Topic: ~ காய்கறிகள் பிரியாணி ~  (Read 555 times)

Offline MysteRy

காய்கறிகள் பிரியாணி



பாஸ்மதி அரிசி-400 gm
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
பச்சைமிளகாய்-4
பீன்ஸ்-50 gm
காரட்-50 gm
பட்டாணி-50 gm
உருளைக்கிழங்கு-50 gm
தேங்காய்துருவல்-அரைமூடி
பட்டை-சிறிதளவு
ஏலக்காய்-2
லவங்கம்-சிறிதளவு
இலை-சிறிதளவு
கிராம்பு-சிறிதளவு
புதினா-சிறிதளவு
கொத்தமல்லி-சிறிதளவு
இஞ்சி- சிறிதளவு
பூண்டு-6
மிளகாய்த்துள்- சிறிதளவு
தயிர்-1/2 Cup
எலுமிச்சைபழம்-பாதி

பாஸ்மதி அரிசியை கொஞ்சம் நேரம் ஊறவைத்துகொள்ளவேண்டும். பின்பு இஞ்சி ,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். தேங்கைதுருவளை அரைத்து தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், இலை, இவற்றை எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவேண்டும். கொஞ்சம் தயிர், எலுமிச்சைபழம் போட்டு அரிசியையும் போட்டு வதக்கவேண்டும்.
பின்பு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு கிளறி விட வேண்டும். பின்பு புதினா, கொத்தமல்லி போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும். குக்கரில் 2 விசில் வந்ததுதும் இறக்கவும். பின்பு பிரியாணி வெந்ததும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும்.பின்பு ருசியான, மனமான பிரியாணி தயார்.
இதற்கு தயிரில் ஊறிய வெங்காயம், தக்காளி, காரட், பச்சைமிளகாய், உப்பு போட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.