Author Topic: ~ நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 5 பழங்கள் ~  (Read 373 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226710
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 5 பழங்கள்


1. ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை நீரழிவு நோயாளிகளுக்கு தந்துள்ளன. அவை என்னவென்றால் நாளொன்றுக்கு குறைந்தது 4 முதல் 5 வகை பழங்களை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கான முதல் 10 பழங்களைப் பற்றி ஒரு பட்டியல் …
கிவி (பசலிப்பழம்): பல ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் செய்த ஆராய்ச்சியின் மூலம் சொல்வது என்னவென்றால், கிவி பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

2. நாவல் பழம்/ப்ளாக் ஜாமூன்: சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான பழங்களுள் சிற‌ந்த பழமாகும். இது இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த பழத்தின் விதைகளை பொடி செய்து சாப்பிடுவதின் மூலம், நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

3. விளிம்பிப்பழம் (அ) புளிச்சிக் காய்/ஸ்டார் புரூட்: நாவல் பழத்தை போன்றே இந்த பழமும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு எச்சரிக்கை என்னவென்றால், நீரிழிவு நெப்ரோபதி சிகிச்சை மேற்கொள்ளும் நபர் கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.

4.கொய்யா பழம்: கொய்யா நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கிறது. கொய்யாபழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் உயர் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த பழத்தில் தேவையான கிளைசமிக் அமிலம் உள்ளது.

5. அன்னாசி: அன்னாசிபழம் வைரஸ் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகளை உள்ளடக்கியுள்ளது எனவே இந்த பழம் நீரிழிவு நோயளிகளுக்கு ஏற்ற நல்லபழமாகும்.