Author Topic: ~ அவல் உப்புமா ~  (Read 320 times)

Offline MysteRy

~ அவல் உப்புமா ~
« on: July 14, 2016, 09:31:06 PM »
அவல் உப்புமா



தேவையானவை:

அவல் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.