ஆசிரியர்கள்

தமிழ் தாயின் பிள்ளைகள் நாங்கள்!
எங்களுள் தமிழ் வளர்த்த நீங்களும்
வளர்ப்பு தாய் தானே!
கல்வியின் கடவுள் சரஸ்வதியாம்
கனவில் கண்டதாய் ஞாபகம்
ஆனால், உண்மை வகுப்பறையில் என்றது!
வாக்கியத்தில் பல பிழைகள் செய்தவர்கள் நாங்கள்!
ஆனால் எங்கள் வாழ்க்கை பிழையாகிவிடகக்கூடாது
என்பதற்காக உழைப்பவர்கள் நீங்கள்!
நன்றி சொல்ல கடமைப்படு இருக்கிறோம்
ஆனால் மனம் வருடுகின்றது
நன்றி என்ற ஒற்றை சொல் போதுமோ... என்று.
பூ மாலைகள் சூட்டலாம் என்று நினைத்தேன்
நன்றி என்ற ஒற்றை சொல்லே போதாதபோது
ஒரு நாள் பூத்து,
ஒரு நாள் மடியும் பூக்களும் பொய்யோ??
சிந்தித்தேன் பாமாலை வந்தது
வடித்து விட்டேன் உயிரோடு இருக்கும்
என் உயிர் உதிரும் வரை...
நன்றி அனைத்து ஆசிரியர்களுக்கும்....
இவன்
இரா .ஜெகதீஷ்