Author Topic: வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளுக்கு பார்வை பாதிக்கும்  (Read 949 times)

Offline RemO

வெளி உலகத்துடன் அதிகம் தொடர்புக் கொள்ளாது வீட்டுக்குள்ளேயே விளையாடும் சிறுவர்களது கண்பார்வை, மங்கலாகும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை சூரிய ஒளி அதிகம் உடலில் படாமலிருப்பதே இதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் குழந்தைகளின் கண்பார்வைக் குறைவுக் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டனர். சுமார் 10,400 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர், அவர்களை பல பகுதிகளாக பிரித்து முதலில் பார்க் உள்ளிட்ட வெளி இடங்களில் விளையாட அனுமதித்தனர். பின்னர் ஒரு சில பிரிவினரை வெளியில் விளையாடும் நேரத்தை குறைத்து வீட்டிற்குள் மட்டுமே விளையாட அனுமதித்தனர்.இதில் வெளியில் விளையாடிய குழந்தைகளை விட வீட்டிற்குள் விளையாடிய குழந்தைகளின் பார்வைத்திறன் குறைவாக இருந்தது. இதற்குக் காரணம் வெளி உலகத்துடன் அதிகம் தொடர்புக் கொள்ளாது வீட்டுக்குள்ளேயே விளையாடுவதுதான் என்று கண்டறியப்பட்டது. மேலும் இயற்கை சூரிய ஒளி அதிகம் உடலில் படாமலிருப்பதே இதற்கு காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் தங்களது கண்பார்வை தொடர்புடைய ஆய்வறிக்கையை அமெரிக்க பல்கழைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், கணினியில் விளையாடிக்கொண்டும் இருக்கும் சிறுவர்களின் கண்பார்வை மங்கலாகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வு முடிவினை டெலிகிராப் இதழ் வெளியிடப்பட்டுள்ளது.