Author Topic: ~ மரவள்ளிக் கிழங்கு தோசை ~  (Read 349 times)

Offline MysteRy

மரவள்ளிக் கிழங்கு தோசை



தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி – 1 கப்
மரவள்ளிக் கிழங்கு – சிறியதாக 1
காய்ந்த மிளகாய் – 6
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும்.
புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை
அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக
அரைக்கவும்.ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு,
எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.