Author Topic: ~ நீரிழிவு நோயாளர்களுக்கான செயற்கை சதையி ~  (Read 329 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226710
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீரிழிவு நோயாளர்களுக்கான செயற்கை சதையி



வரும் 2018 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் உலகின் முதலாவது செயற்கை சதையி அறிமுகப்படுத்தப்படும் என லண்டன் விஞ்ஞானிகள் தெருவிக்கின்றனர்.

இது வகை 1 நீரிழிவு நோய்க்குரிய சிறந்த தீர்வாகவும், குளுக்கோஸ் அளவை கண்காணித்து, கட்டுப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் வகை 1 நீரிழிவு நோயாளிகள் இருவேறு சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது.
அதில் ஒன்று குளுக்கோஸ் அளவை கண்காணிப்பதற்கெனவும், மற்றையது இன்சுலின் சரியான அளவை வழங்குவதற்கெனவுமாகும்.
ஆனால் தற்போதைய தொகுதி அவ்விரண்டையும் ஒன்றிணைத்து மூடிய தொகுதியாக ஆக்கப்படவிருக்கிறது.
இந்த தொகுதியானது அதை உபயோகிப்போரின் கண்காணிப்பின்றி தானகவே வினைத்திறனாக குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தக் கூடியது என Cambridge பல்கலைக்கழக விஞ்ஞானி Roman Hovorka கூறுகின்றார்.
மிகச்சிறிய இந்த சாதனமானது மனிதன் விடக்கூடிய தவறுகளையும் திருத்தக்குடியது, அதாவது சரியான நோத்தில் சரியான அளவு இன்சுலினை வழங்குகின்றது.
இவை சதையியின் பீற்றா கலங்களுக்கு பதிலாக பிரதியீடு செய்யப்படக் கூடியன.
சதையின் பீற்றா கலங்களே இன்சுலினை தொகுத்துச் சுரக்கின்றன. 2018 வரை பொறுத்திருந்து தான் பார்க் வேண்டும் இச் செயற்கை சதையியின் தாக்கம் எவ்வாறு இருக்கப் போகிறது என்று