மனிதம் அது புனிதம்
ஆன்மா இன்றேல்
அது ஒரு பிணம்...
உடலும் ஆன்மாவும்
இணையும்
போதுதான்
மனிதம் பிறக்கிறது..!
மாண்பு அடைகிறது !!
மனிதா!
ஆத்மாவும் நீயும்
சமநிலையாய்
இருக்கும்போதுதான்
மனிதப் புனிதனாகின்றாய்!
நீ உனக்காக அல்ல உன்
ஆத்மாவுக்காய்
நன் ஆத்மாவுக்காய்
நித்தம் வாழ வேண்டும்!
உன்னால் எந்த ஆத்மாவும்
தண்டிக்கப்படக் கூடாது-ஏன்
துன்பப்படவும் கூடாது!
ஆன்மாவின் விரோதிகள்
கெட்ட நடத்தைகளும்
பவக்கறைகளும் தான்!
நாகரீக மோகத்தில்
விழுந்துதவிக்கும் உனக்கும்
ஆறுதல் கொடுப்பதுவும்
ஆன்மா தான்!
சோதனையிலும் சோகத்திலும்
சிக்கித்தவிக்கும் உனக்கும்
ஒத்தடம் கொடுப்பதும்ஆன்மா தான்!
பரிசுத்தவாளனாய்- நீ
மரணிக்க வேண்டுமெனில்
தூங்க முன் ஒருமுறையாவது
உன் செயல்களை
சரி பார்த்துக் கொள்!
நோக்கங்கள் நிறை வேற...
எண்ணங்கள் பரிசுத்தமாக...
மறுமையில் ஈடேற்றம் பெற...
உன் ஆத்மாவை
பரிசுத்தத்தாலும் நல்லமல்களாலும் தூய்மையாக்கு...
பொருமையாலும் பணிவாலும் நிரப்பு...
அறிவாலும் திறமையாலும் நிறைத்துவிடு!
தீயவற்றைவிட்டும் தூரமாகு!
அப்போதுதான்
ஈருலகிலும் வெற்றியாடைவாய்!