வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழும் காலங்கள் வரம்..
எத்தனை விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
டபுள்ஸ் போகும் சுகம்..
ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும் பேசி..
நண்பனின் குடும்பத்தை தன் குடும்பமென தத்தெடுத்து..
நண்பன் எச்சில் செய்த உணவை கூட ரசித்து..
ஒரு சண்டை என்பதே சமாதானத்திற்குத் தானே என்பதை உணர்த்தி..
பள்ளி முடிந்ததும் சீருடை தொலைக்கிறோம்.
வளரத் தொடங்கியதும் நட்பை தொலைக்கிறோம்.
எத்தனை எத்தனை சந்தோஷமான தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம் இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...