Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு ~ (Read 320 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226712
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு ~
«
on:
July 05, 2016, 10:39:23 PM »
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு
தேவையான பொருட்கள் :
உலர்ந்த அத்திப்பழம் (fig) – 10
பேரீச்சம்பழம் – 12
பாதாம் – 12
முந்திரி – 12
பிஸ்தா – 12
தேன் – 2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு – 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
* உலர்ந்த அத்திப்பழத்தை வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அது முழுமையாக வெந்நீரில் மூழ்கியிருக்க வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் எள்ளு லேசாக வெடிக்கும் வரை வறுக்கவும்.
* பிறகு அதே வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா இவைகளையும் வறுத்து ஆற வைக்கவும்.
* இம்மூன்றும் ஆறிய பிறகு மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். மாவாக அரைக்காமல் கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஊறிய அத்திப்பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
* பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
* பிறகு வாணலியில் நெய் விட்டு அரைத்த அத்திப்பழத்தையும், பேரீச்சம்பழத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவையிரண்டும் நன்றாக ஒன்று சேர வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்.
* 3 நிமிடங்கள் கிளறிய பின் பொடித்து வைத்துள்ள பருப்புகள் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுப்பை அணைத்துவிட்டு சற்று சூடாக இருக்கும் போதே கைகளில் கொஞ்சம் நெய் தடவிக்கொண்டு இந்தக் கலவையை லட்டுகளாக உருட்டி பிடிக்கவும்.
* உருட்டிய லட்டுகளை வறுத்த எள்ளின் மீது உருட்டி எடுத்து வைக்கவும்.
* எள் சேர்க்க விரும்பாதவர்கள் லட்டுகளை அப்படியேவும் சாப்பிடலாம்.
* சத்துகள் நிறைந்த சர்க்கரை சேர்க்காத இனிப்பு இது. குழந்தைகளுக்கு மிகவும் சத்து நிறைந்தது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு ~