Author Topic: ~ ஸ்டோபெர்ரி ஐஸ்கிரீம் ~  (Read 631 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஸ்டோபெர்ரி ஐஸ்கிரீம்



தேவையான பொருட்கள்

பால் -1/2 l
சீனி -200 g
கோன் ப்ளார் -1 tbsp
ஜெலட்டின் -1 tsp
ப்ரெஷ் க்ரீம் – 200 ml
ஸ்டோபெர்ரி பழங்கள் -100 g
ஸ்டோபெர்ரி எசென்ஸ் -1 tsp

செய்முறை

பாலை அடுப்பில் வைத்து நன்கு கொதித்து வந்ததும், சீனி சேர்த்து, மறுபடியும் காய்ச்சவும். ஆறிய பால் சிறிது எடுத்து, அதில் கோன்ப்ளார் கலந்து தனியே வைக்கவும்.
தண்ணீரில் ஜெலட்டினை கரைத்து, அடுப்பில் 2 நிமிடங்கள் வைத்து, அதில் கொதித்துக் கொண்டிருக்கிற பால், கோன்ப்ளாரை அதில் சேர்க்கவும்.
கோன்ப்ளார் வெந்து, கலவை ஓரளவு கெட்டியானதும், இறக்கி, ஆற விடவும்.
ஆறியதும் எசென்ஸும் ப்ரெஷ் கிரீமும் சேர்த்து, மிக்சியில் விப்பர் பிளேடில் ஒரு சுற்று ஓட விட்டு, பொடியாக நறுக்கிய அல்லது அரைத்த ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கலந்து, 2 மணி நேரங்களுக்கு ப்ரீசரில் குளிர வைக்கவும். பின்பு கூளாக உண்ணவும் .