Author Topic: ~ கொள்ளு பொடி ~  (Read 345 times)

Offline MysteRy

~ கொள்ளு பொடி ~
« on: July 05, 2016, 10:13:20 PM »
கொள்ளு பொடி



கொள்ளு – 1/2 கப்,
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பூண்டு – 2,
எண்ணெய் – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொள்ளு, துவரம்பருப்பு, மிளகு, பூண்டு, மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து உப்பு, பெருங்காயம் போட்டு ஆற விடவும். ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு பொடியாகும் வரை அரைக்கவும். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.