Author Topic: ~ மெத்தி உருளைக் கிழங்கு பொரியல் ~  (Read 328 times)

Offline MysteRy

மெத்தி உருளைக் கிழங்கு பொரியல்



தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு துண்டுகள்
வெந்தயக்கீரை – தலா ஒரு கப்
வெங்காயம் – கால் கப்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – தேவையான அளவு
கடுகு – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லண்ணெய் – தேவையான அளவு
கீறிய பச்சை மிளகாய் – 2

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும்.
இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாகக் கிளறி, வதங்கியதும் இறக்கவும்.