Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 108  (Read 3099 times)

Offline MysteRy

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 108
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Pavithra அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:32:13 AM by MysteRy »

Offline பொய்கை

விடலை வந்தபோது கண்
மடலை திறந்து வைத்தேன்..

புடலை போல மேனியால் வந்தே
மடலை கொடுத்து சென்றாள்..

கடலை தினம் போட்டே, அறிவு
கடலை வற்ற   வைத்தாள்..

மடலை தினம் அனுப்பி  என்
உடலை சிலிர்க்க வைத்தாள்..

கூடலை யான் நோக்கியதால்  தினம்
ஊடலை உண்டு செய்தாள்..

சாடலை அவள்  நிறுத்தி என்னுள்
தேடலை தினம் கொணர்ந்தாள்..

காதலை சொல்ல நானும்  பூவினை
அன்பாய்  கொண்டு சென்றேன்..

வாடலை  உண்டு செய்தாள்..என்மன
வாடலை உண்டு செய்தாள்..

ஆடலை அரங்கேற்றி என்னுள் இப்
பாடலை எழுத வைத்தாள் ..


என்றும் நட்போடு ,
பொய்கை







« Last Edit: June 26, 2016, 03:23:26 PM by பொய்கை »

Offline thamilan

பெண்ணே
உன்னுள் ஒரு இதயம்
இதமாக இளைப்பாறும் போது
என் இதயத்துக்கு ஏன் தாலாட்டுப் பாடினாய்

உன் துரோகத் தாலாட்டில்
என் மனம் உறங்கவில்லையடி
உயிரற்றுப்  போனது

உன் மனம்
ஒரு சோலைவனம் என்று நினைத்தேன்
அதில் காதல் விதை விதைத்து காத்திருந்தேன் 
அது வறண்ட பாலைவனம் என
இன்று தான் உணர்ந்தேன்

உன் பயாஸ்கோப்  பார்வைக்கு
என்னை பலியாக்கிவிட்டு
உன்னால் மட்டும் எப்படி
இயல்பாக இருக்க முடிந்தது

நானோ சோகப் போர்வைக்குள்
முகம் புதைத்து
ஒவ்வொரு நாளும் கண்ணீருடன்
 
முழுநிலவாய்
உன் மனம் மட்டும் அழகாய்
அகம் மட்டும் ஏன்
அமாவாசையாய்

உன் புன்னகை என்றும்
மொட்டவிழ்ந்த மல்லிகை மலராக
உன் வார்த்தைகள் மட்டும்
அரளிப்  பூக்களாக

காதலன்
கவிஞன்
பைத்தியக்காரன்
மூவரும் ஓரினமாம்

உன்னை காதலித்தேன்
கவிஞன் ஆனேன்
உன் பார்வையை திருப்பி என்னை
பைத்தியக்காரன் ஆக்கிவிடாதே

கண்ணீர் நிரப்பப்பட்ட என் பேனாவின்
அழுகுரல் கவிதைகளாய்
செவிடரிடம் கதை சொல்லி
ஊமையரிடம் விமரிசனம் கேட்டவனைப் போல நான்
உன்னிடம் காதலை சொல்லி
காலத்தை வீணடித்து விட்டேன்

உன் பார்வைத் தழும்புகள் பட்ட
எனது முகத்தை
கண்ணீரால் கழுவி விட்டேன்
மீண்டும் ஒரு முறை
காயப்படுத்தி விடாதே

நம் காதல் வாழ்க்கையின்
கடைசி அத்தியாயம்
கல்லறையில் முடியப் போகிறது
அங்கே கல்லறைப் பூக்களாக சரி
மலர்வாயா   
 

« Last Edit: June 26, 2016, 10:07:31 PM by thamilan »

Offline JEE

போடா போடா புண்ணாக்கு
போடாதடா தப்பு கணக்கு.......

மடல் கொடுத்து ஏமாந்நோர்
மயிரிழையில் தப்பித்தோர்.....
உடல் கொடுத்து ஏமாந்நோர்
உறவின்றி நாளும் தவித்தோர்.......

பூச்சென்டுகொடுத்து ஏமாந்நோர் 
பூவிதனில் பலர் இருக்க  ...  உன்
பூச்சென்டு விளையாட் டெல்லாம் 
என்னிடம்  பயனில்லையடா.....

நாலும் தெரிந்தவளாய்
நாட்டையே ஆள .....
நான் கற்ற கல்வியை ஊட்டிய
என் ஆசான்கள் உன் போல்
ஏமாற்றுவோர் பலரை
வென்றிட வழிவகை கற்று கொடுத்துள்ளனர்......

எங்கும் எதிலும் தைரியமாய்
நின்று செயல்பட
எனக்கு தைரியத்தை ஊட்டிய
என்தாய் உன் போல்
ஏமாற்றுவோர் பலரை
கிழித்திட வழிவகை கற்று கொடுத்துள்ளார்....

எங்கும் எதிலும் தைரியமாய்
நின்று செயல்பட
எனக்கு தைரியத்தை ஊட்டிய
என்தந்தை உன் போல்
ஏமாற்றுவோர் பலரை
அடித்திட நவீன ஆயுதத்தை  கற்று கொடுத்துள்ளார்..........

இத்தனைநாள் என்னை பற்றி அறியாத
நீ இன்று அறிந்து கொள்
உன்  பூச்சென்டோடு
நான்  கோபப்படுமுன் ஓடி விடு
இன்னும் நின்றால்நான் நானா இருக்க மாட்டேன் ...........ங்கொய்யாள.............அன்றாடம்
 கவிதைக்கு நாங்க தான் கிடைத்தோமா .........
« Last Edit: June 26, 2016, 11:34:57 AM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline SweeTie

கடலை தினமும் போட்டால்
காதல் என்றாகிடுமா?
மடல் அனுப்பவில்லலையென்றால்
நண்பன் மனம் வாடுமென்று
தினமும் ஒரு மடல் போட்டேன்
கண்டதும் காதல்  வேண்டாம்
தப்பென்று  உணர்த்தியவன்
ஆறுதல் வார்த்தைகளால் 
அன்பைக் கொட்டியவன் 
என்னுயிர் நண்பனாய்
என்னையே காத்தவன் நீ
காதலுக்கும் மேல் படியில்
உன்னை வைத்தேனடா
அத்தனையும் விஷமா?


புடலைபோல் மேனியென
புகழ்ந்ததெல்லாம் பொய்யா?
வழிமேல் விழி வைத்து
காத்திருந்ததுவும் கனவா?
தெருவோரம் வரைவந்து
விட்டுச் சென்றதுவும்  பொய்யா?
யாரைத்தான் நம்புவதோ?
காதலைச் சொல்ல இன்று
பூங்கொத்துடன் வந்தவனே
சாதல் மேலடா  இதனிலும்   
இதனால்தான் என்னவோ
என் தோழி breez 
நண்பன்  வேண்டவே  வேண்டாம்   என
அண்ணா  என்ற வார்த்தையால்
அழைக்கிறாளோ !!!
 
« Last Edit: June 26, 2016, 08:13:23 PM by SweeTie »

Offline BreeZe



மண் பார்த்த என்னை
கண்பார்த்து ஆயிரம் கவிதை சொல்லி
காதல் பாடம் நடத்தியவனே

என் நினைவில்
நிழலாக இருந்து
என் கனவிலும் தொடர்ந்தவனே

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் மாற்றுவதற்கும்
காதல் தேர்தல் கூட்டணி
என நினைத்தாயா

உன் பெயரை பதிவு செய்த
என் இதயத்தில்
இன்னொரு பெயரை பதிவு செய்ய
என் இதயம் ஒன்றும்
ஒலிநாடா இல்லை

உயிரில் இணைத்து
உதிரத்தில் கலந்து
உணர்வில் ஒன்றாவது தான்
காதல் என்று தெரியாதவனே

ஏட்டில் எழுதினால்
அழித்து விடலாம்
இதயத்தில் அல்லவா
எழுதி விட்டேன்

உள்ளுக்குள் உன்னை சிற்ரபமாக
செதுக்கிவிட்டேன்
இப்போது சிதைக்க சொல்கிறாயே
நியாயமா

காதலை சொன்னாய் - நீ
காலை சுற்றிய கருநாகம் என்று
புரியவில்லை
பூக்களைத் தந்தாய்
கையை கிழிக்கும்
முள் நீ என புரியவில்லை

அஃறிணை மனிதனே
பெண் என்றால்
பொழுதுபோக்குச் சித்திரம் என்று நினைத்தாயா

அன்று என்னை நீ
கயல் என்று சொன்னபோது
காரணம் புரியவில்லை எனக்கு
இன்று புரிந்தது
நீ ஒரு தூண்டில்காரன் என

கோள்கள் சுற்ற மறந்தாலும்
உன் கால்கள் சுற்ற மறந்ததில்லை
என் தெருவை தினமும்
இன்று ஜன்னல் கம்பிகளுக்கிடையில்
கண்ணீருடன் நான்   

பதிப்புரிமை
BreeZe


உன்போல இல்லை
ஓர் நாளும் நான்
முப்பது செய்திகண்டும்
ம் என்று முடிக்கின்ற
உன்போல இல்லை
ஓர் நாளும் நான்

ததும்பிடும் காதலை
தலையணை ஈர்க்க செய்யும்
உன்போல இல்லை
ஓர் நாளும் நான்

சிரித்தாய் ரசித்தாய்
கைகுட்டை மறைவாய்
ஆயிரம் பேரறிந்த என் காதலும்
ஆழ்மனமட்டும் அறிந்த உன் காதலும்

காலத்தின் தோற்றம்
கடைசியில் ஏமாற்றம்
உன்போல இல்லை
ஓர் நாளும் நான்

அளவிட முடியாதடி
அன்பின் எல்லை இது
வேண்டாமென
அழித்தும் சாகவில்லை இது

நிலைமாறும் நிழல் போல நான்
நீ என்தன் ஒளி போலதான்
உனை பொருத்தே
என் நிலையமையும்!

தனிமை வலிதான்
தவிப்பும் வலிதான்
தொடரும் இதுவே -நான்
உன்னோடிருந்தால்!

அதனால் புரியும்
ஓர் நாளுனக்கும்
உன்போல இல்லை
ஓர் நாளும் நான்!

.சக்தி

!! DJ HussaiN !!

  • Guest
 காதல் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்
 என் எண்ணத்தை மாற்றி அமைத்தாய்
 என் மீது பாசம் காட்டினாய்
 நானும் உன்மீது பாசம் வைத்தேன்

 என் மீது அக்கறை கொண்டாய்
 நானும் உன்மீது அக்கறை கொண்டேன்
 நான் செய்யும் சிறு சிறு தவறுகள் அனைத்தையும்
 நீ ரசித்தாய்

 நான் எது செய்தாலும் நீ குறும்பாக எடுத்து கொண்டாய்
 என்னை செல்லமாக அழைத்தாய் 
 நான் அதை ரசித்தேன் 
 எல்லா வேலையிலும் என்கூடவே  இருந்தாய்
 நான் கஷ்டம் படும் போது
 அதில் நீயும் பங்கேற்று கொண்டாய்
 நான் உன்மீது காதல் வய பட்டேன்
 உன்னிடம் என் காதலை சொல்ல
 மலர்சண்டோடு வந்தேன்
 நீ மலரை ஏற்று கொண்டாய் ஆனால்
 என் காதலை ஏற்று கொள்ளவில்லை
 அப்போது தான் தெரிந்தது
 நீ என் தோழியாக என்மீது பாசம் காட்டினாய் 
 அதை நான் தவறாக புரிந்து கொண்டேன் என்று

 உன் முகத்தை பார்க்க முடியாமல்
 நான் ஏதும் பேசாமல் திரும்பி சென்றேன்
 கொண்டு வந்த மலர்களோடு .......

 
 இதில் என்ன சொல்கிறேன் என்றால்
 நம்முடன் ஒரு பெண் பாசமாக பழகுவதை
 நம்மை அவள் காதலிக்கிறாள் என்று
 தவறாக புரிந்து கொண்டு
 உங்கள் நல்ல நட்பினை
 வீணடித்து கொள்ளாதீர்கள் .....

 நட்ப்புக்கு  புரிதல் அவசியம் 
 அந்த புரிதல் இல்லை என்றால்
 நட்பு காதலாகவும் மாறும்
 வேறு எதுவாகவும் மாறும்
 உங்கள் தோழன் , தோழி மனதினை
 நன்று புரிந்து கொள்ளுங்கள்
 உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்
 உங்கள் நட்ப்பும் நன்றாக இருக்கும் ......

 என்றும் பாசத்தோடு உங்கள்
             Dj Husain
« Last Edit: June 27, 2016, 11:33:08 PM by !! DJ HussaiN !! »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
வணக்கம் !!!
 நட்பா காதலா ... ???
 காதலா நட்பா ...???
 நட்பால் காதல் வந்ததா...???
 காதலால் நட்பு வந்ததா ...???
 
 மாத பிதா குரு தெய்வம் !
 இடையில் நட்பைச் சேர்க்க
 மறந்தார்கள் ஏனோ ???
 பெற்றோர்களுக்கு அடுத்து
 இறைவன் கொடுத்த வரம் நட்பு ...!!!
 
 என் தோழனே,
 வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திக் கொண்ட
 உறவுகள்யாவும் ஒரு வித
 எதிர்ப்பார்ப்புடன் உண்டானது
 ஆனால் உன்மேல் நான் கொண்ட நட்பு
 எதிர்ப்பார்ப்பின்றி வந்தது !!!
 
 அரட்டைகள் அடித்தோம் !!!
 ஒன்று சேர்ந்து ஊர் சுற்றினோம் !!!
 உணவுகளை பகிர்ந்து உண்ணோம் !!!
 ஒன்று சேர்ந்து வம்புக்கு சென்றோம் !!!
 
 என் கஷ்ட நேரங்களில் உன் கைக் கொடுத்தாய் !!!
 உன் துன்ப நேரத்தில் சாய என் தோல் தந்தேன் !!!

 உன்மேல் நான் கொண்டேன் அக்கறைத்
             ஒரு தோழியாக ....!!!
 என்மேல் நீ அக்கறைக் கொண்டாயா
 என் தோழனே ??? !!!
 அக்கறைக் காட்டினாய் ...உரிமையும் சேர்த்து எடுத்து
 கொண்டாய் என்று எண்ணுகிறேன் ..... !!! ~
 ஒரு நண்பனாய் நீ உரிமை எடுத்துத்திருந்தால்
 உமது கட்டளைகளுக்கு என்றும்
 அடிப்பணிவேன் தோழனே !!!

 நீயோ காதலனாக உரிமை எடுத்தாய் !!!
 உன்மேல் நான் கொண்ட அக்கறையும் அன்பும்
 என்வசம் உன்னை காதல் வயம் படவைத்திருந்தால் !!!
 கோடி முறை மன்னிப்புக் கேட்கின்றேன் ...
 ஏற்றுக்கொள் !!!

 நண்பனாக உன்னை நேசித்த உள்ளம்
 காதலனாக ஏற்க  மறுக்கின்றது !!! ~

 அன்று பூக்களோடு என்னை ஏற்றுக்கொள் ,....
 என்று சொல்லிவந்தாய்  .... !!!
 பூக்களை வாங்கி இன்றும் உன்னை
 ஏற்க தயாராக உள்ளேன் !!!
 காதலனாக இல்லை என் ஆருயிர் தோழனாக !!!
 உன் வருகையை எண்ணிக் காத்திருப்பேன் என் நண்பனே !!!
 
 நட்பு என்பது இறைவனை போன்று
 தூய்மையானது புனிதமானது ... !!!
 அதைக் காதல் என்றுச்  சொல்லி
 நட்பெனும் பொக்கிஷத்தை இழந்துவிடாதீர் !!!
 நட்பு .....யாராலும் இடைப்போட முடியாது !!!
 உண்மையான நட்பை விலைக்கு வாங்கவும்  முடியாது !!!

 அனைத்து நண்பர்களுக்கும் !!!
 என்  FTC  நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் !!!

  ~ !!! நன்றி !!! ~
 ~ !!! என்றும் நட்புடன் !!! ~
     ~ !!!  ரி தி கா !!! ~
« Last Edit: June 30, 2016, 04:16:18 PM by RiThiKa »


Offline EmiNeM

என்
விழிக்குள்
உலகமானவனே,
உயிர் தொட்டு
செல்பவனே.,

நம் கண்கள்
குளமாக
தேசம் கடந்து
என் நேசம் கொண்டு
நீ போகிறாய்
எனக்காக
உன் இதயத்தை விட்டு...

உன்
எண்ணம் தாங்கிய
உன் இதயத்தோடு
காத்திருப்பேன்.,
உன் கைகளில்
நான் தந்த
வாடாத
மலர்க்கொத்தாய்., மீண்டும்
நீ வரும்
பாதை நோக்கி...

தேசம் பல கடந்து
சென்றாலும்
என் சுவாசம்
அங்கு
உனக்காக வாசம் செய்யுமடா...