Author Topic: ~ ஸ்டஃப்டு பிஞ்சு கத்தரிக்காய் பஜ்ஜி ~  (Read 358 times)

Offline MysteRy

ஸ்டஃப்டு பிஞ்சு கத்தரிக்காய் பஜ்ஜி



தேவையான பொருட்கள்

குட்டி கத்திரிக்காய்(பிஞ்சு) – 10
எண்ணெய் – பொரிப்பதற்கு
பஜ்ஜி மேல் மாவு செய்ய:
கடலைமாவு – 1/2கப்
அரிசிமாவு – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயதூள் – 1/4 தேக்கரண்டி
சோடா உப்பு – 1 சிட்டிகை (1pinch)
உப்பு – தேவையான அளவு
கத்திரிக்காயின் உள்ளே ஸ்டஃப் செய்ய:
தேங்காய் துருவல் – 1/4 கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்(பொடித்தது)
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயதூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கத்திரிக்காயை நான்காக கீறி (முழுவதும் கீறாமல் காம்பு பகுதி ஒட்டியிருக்கும் படி) உட்புறம் லேசாக உப்பு தடவி வைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி கத்திரிக்காய்களை போட்டு 2 நிமிடம் பொரித்து எடுத்து ஆற விடவும்.
பஜ்ஜி மேல்மாவு செய்ய கொடுத்துள்ள பொருட்களோடு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
பூரணம் செய்ய கொடுத்துள்ள பொருட்களோடு லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும்.(துவையல் பதத்தில் இருக்க வேண்டும்)
பொரித்த கத்திரிக்காய் ஆறியதும் பூரணத்தை கத்திரிக்காயினுள் ஸ்டஃப் செய்து பஜ்ஜி மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.