Author Topic: ~ மசாலா ரவை இட்லி ~  (Read 337 times)

Offline MysteRy

~ மசாலா ரவை இட்லி ~
« on: June 27, 2016, 09:16:32 PM »
மசாலா ரவை இட்லி



]தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்
புளிக்காத தயிர் – ¾ கப்
நீர் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
சமயல் சோடா – ½ தேக்கரண்டி
முந்திரி பருப்பு – தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உழுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வத்தல் மிளகாய் – 1
(அல்லது)
பச்சை மிளகாய் – 1
கறி வேப்பிலை – 1 கொத்து
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

செய்முறை

ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
புளிக்காத தயிரை அதனுடன் சேர்க்கவும்
நன்கு கலக்கி 5 நிமிடம் வைக்கவும்
இப்போது ரவை மென்மையாக இருக்கும்
நீர் சேர்க்கவும்
உப்பு சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
கடுகு சேர்க்கவும்
உழுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய் அல்லது நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்\
சிறிது கறி வேப்பிலை சேர்க்கவும்
பெருங்காயம் சேர்க்கவும்
சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு இதனை ரவையுடன் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
இட்லி செய்வதற்கு சற்று முன் சமயல் சோடா சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
இட்லி தட்டுகளை எடுத்துக் கொள்ளவும்
அவற்றின் நடுவில் முந்திரி பருப்பை வைக்கவும்
பின்பு அதன் மீது மாவை விடவும்
பின்பு அவற்றை வேக வைக்கவும்
ரவை இட்லி ரெடி!!!!