Author Topic: ~ பம்கின் ரோல் ~  (Read 345 times)

Offline MysteRy

~ பம்கின் ரோல் ~
« on: June 27, 2016, 08:26:18 PM »
பம்கின் ரோல்



தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 3/4 கப்
பேக்கிங் பவுடர் – 1/2 டீ ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீ ஸ்பூன்
பட்டை தூள் – 1/2 டீ ஸ்பூன்
கிராம்பு தூள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – 1/4 டீ ஸ்பூன்
முட்டை – 3
சீனி – 1 கப்
பம்கின் கூழ் (pumpkin puree) – 2/3 கப்
ஃபில்லிங் (Filling)
க்ரீம் சீஸ் – 1 கப் (8 oz)
ஐஸிங் சுகர் – 1 கப்
பட்டர் – 6 டேபிள் ஸ்பூன்
வெனிலா – 1/2 டீ ஸ்பூன்
பம்கின் ரோல்

செய்முறை:

* அவனை 375 Fக்கு முற்சூடு செய்யவும்.
* 15 x 10 ட்ரேயில் வாக்ஸ் பேப்பர் போட்டு, மேலே பட்டர் பூசி, மாத்தூவி வைக்கவும்.
* சுத்தமான கிச்சன் டவலில் ஐஸிங் சுகர் தூவி வைத்துக்கொள்ளவும்.
* மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, பட்டை(சின்னமன்) தூள், கிராம்பு தூள் எல்லாவற்றினையும் ஒன்றாக கலக்கவும்.
* முட்டை, சீனி இரண்டையும் எலக்ட்ரிக் மிக்ஸரால் நன்கு அடிக்கவும்.
* பின்னர் பம்கின் கூழ் சேர்த்து, நன்கு அடிக்கவும்.
* இறுதியில் மாவுக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
* இந்தக் கலவையினை ட்ரேயில் ஊற்றி, 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
* கேக் வெந்ததும், கிச்சன் டவலை மேலே விரித்து, ட்ரேயினை கவிழ்த்து வைக்கவும்.
* மேலே லேயராக இருக்கும் பேப்பரினை மெதுவாக உரித்து எடுக்கவும்.
* கிச்சன் டவலோடு சேர்த்து (ட்ரேயினை எடுத்திட்டு தான் சுற்றணும்), பம்கின் ரோலினை சுற்றி அப்படியே 30 நிமிடங்கள் விடவும்.
* சூடு ஆறியதும் கிச்சன் டவலை எடுத்து விட்டு, ஒரு தட்டையான பலகையில் பம்கின் ரோலினை விரித்து வைத்து, ஃபில்லிங்கில் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி, கேக் மீது பூசவும்.
* ஐஸிங் பூசி முடிந்ததும் மீண்டும் மெதுவாக சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வரை வைத்து, பிறகு பரிமாறவும்