Author Topic: ~ குதிகால் செருப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை! ~  (Read 325 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226716
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குதிகால் செருப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது.



இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றம் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிக விலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.
உங்களுக்கு பொருத்தமான வசதியான காலணி அளவை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால்செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.
முதலில் அவற்றை முயற்சி செய்து பாருங்கள்
குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும்வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது. இல்லையேல் உங்களால் அவற்றை அணிந்து நிற்க கூட முடியாது. எனவே செருப்பை அணிந்து நடந்து பாருங்கள்.
உயரமான குதிகால் ஆபத்தானது
நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 4 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.
காலணியின் உட்புறத்தை கவனத்தில் கொள்ளவும்
குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.
அதிக நேரம் அணிய வேண்டிய அவசியமில்லை
அதிக நேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலை முடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.