Author Topic: ~ கட்டா மீட்டா சட்னி பூரி ~  (Read 520 times)

Offline MysteRy

கட்டா மீட்டா சட்னி பூரி



தேவையானபொருள்கள்

தயிர் – 1 1/2 கப்,
ஓமப்பொடி – 1/4 கப்,
காரட் துருவல் – 1/4 கப்,
சாட் மசாலா – 1 டீஸ்பூன்,
மிளகு, சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
கட்டா மீட்டா சட்னி – 1/4 கப்,
பொடித்த பூரி – 1/4 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி – சிறிது.

செய்முறை

ரெடிமேடாக பொரித்த பூரி (சிறிய பூரி) ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளவும். அல்லது தேவையான மைதா மாவில் சிறிதளவு உப்பு, ரவை சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைத்து சின்னச் சின்ன பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
கட்டா மீட்டா சட்னி செய்ய…
புதினா – 1/2 கட்டு,
கொத்த மல்லி – 1 கட்டு,
இஞ்சி – 1 துண்டு,
பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) – 5,
உப்பு – தேவைக்கேற்ப,
வெல்லம் – 1 சிறிய கட்டி,
சாட் மசாலா – சிறிதளவு,
கெட்டியான புளிக்கரைசல் – 5 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை

புதினா, கொத்தமல்லியைச் சுத்தம் செய்து பேரீச்சம்பழம், இஞ்சி, உப்பு, வெல்லம், மிளகாய் தூள், சாட் மசாலா, புளிக்கரைசல் சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். ஒவ்வொரு பூரியாக எடுத்து அடியில் தயிர், கட்டா மீட்டா சட்னி, கேரட் துருவல், நறுக்கிய தக்காளி, பொடித்த பூரி என ஒவ்வொன்றாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, இடையில் சிட்டிகை மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும். ஓமப்பொடியை இறுதியில் சேர்த்து சுவைக்கவும்.
இப்போது சுவையான கட்டா மீட்டா சட்னி பூரி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!