Author Topic: ~ ஆப்பிள் பை ~  (Read 520 times)

Offline MysteRy

~ ஆப்பிள் பை ~
« on: June 22, 2016, 11:05:19 PM »
ஆப்பிள் பை



தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 2
சர்க்கரை – 1/2 கப்
பிரெட் – 5 ஸ்லைஸ்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
ஃபிரெஷ் கிரீம் – 1 கப்

எப்படிச் செய்வது?

ஆப்பிளை தோல், விதை நீக்கி மிக்ஸியில் அரைத்து சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி மிக்ஸியில் பொடி செய்யவும். ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, பிரெட் தூளை அரை அங்குல களத்துக்கு பரப்பி நன்கு அழுத்தவும். அதன் மேல் ஆப்பிள் கலவையை வைத்துப் பரப்பி, மேலும் பிரெட் தூளை பரப்பி நன்கு அழுத்தி அவனில் 180 டிகிரியில் பேக் செய்யவும். ஃபிரெஷ் கிரீமுடன் பரிமாறவும்.