Author Topic: ~ டிப்ஸோ டிப்ஸ் ~  (Read 337 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226718
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ டிப்ஸோ டிப்ஸ் ~
« on: June 04, 2016, 11:37:30 PM »
டிப்ஸோ டிப்ஸ்



இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து அதற்கு பின் இட்லி வார்த்தால் இட்லி பூ மாதிரி இருக்கும்.

தலையில் நீர் கோத்து ஏற்படும் தலைவலிக்கு சுக்கு பெருங்காயத்தை பால் விட்டு உரசி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி சட்டென மறையும்.

உளுந்து வடைக்கு அரைக்கும்போது மிக்ஸியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பின் அரைத்தால் மிக்ஸியிலிருந்து சுலபமாக எடுக்க முடியும் கழுவவும் சுலபம்.

டம்ளர் நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு சிறிது பனைவெல்லம் போட்டுக் கலக்கிச் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

சேமியா கேசரி செய்யும்போது முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றி கொதிக்கவைத்து சேமியாவை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துவிட்டு அதன்பின் சேமியாவுடன் நெய் சர்க்கரை முந்திரிப்பருப்பு கலர் சேர்த்து கிளறினால் கேசரி ஆறிய பின்னும் உதிர் உதிராக இருக்கும்

கண்ணாடி பாட்டில்கள் குறுகியதாக இருந்தால் அதை சுத்தம் செய்யும்போது கைவிரல்கள் உள்ளே போகாது. அத்தகைய பாட்டில்களை சுத்தம் செய்ய சுலபமான வழி எலுமிச்சம்பழத்தை சிறிதாக துண்டுகள் செய்து பாட்டிலில் போட்டு அதன் உள்ளே பாதியளவு தண்ணீர் விட்டுக் குலுக்கினால் கறைகள் போய்விடு