பழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான் உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள் அழிந்துபோகும். ஆனால் பழங்கள் மூலம் சத்துக்கள் அனைத்தும் மனித உடலுக்கு அப்படியே கிடைக்கின்றன. வளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பழங்களை அதிகம் சாப்பிட்டே ஆகவேண்டும்.
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக சாத்துகுடி அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். பழத்தின் உள்ளே 8 அல்லது 10 சுளைகள் காணப்படும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. பழங்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலும் நார்த்தை, முருங்கை, எலுமிச்சை, தென்னை மரங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை.
நார்த்தம் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
பித்தம் தணியபித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
உடல் சூடு தணியஉடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
இரத்தம் சுத்தமடையஇரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.
உடல் வலுப்பெறநார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
நோயுற்றவர்கள் தேறநோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது. இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
வயிற்றுப்பொருமல் நீங்கசிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
சுகமான பிரசவம் ஆககாலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் ஆகும்.
· களைப்பு நீங்கும்
· வாந்தி, மயக்கத்தைப் போக்கும்.
· மூலத்தைக் கட்டுப்படுத்தும்.
· சீரண சக்தியை அதிகரித்து அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.
· தாது கெட்டிப்படும்.
· வாய் கசப்பைப் போக்கும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்.
· மலச்சிக்கல் நீங்கும்
· நீர்க்கடுப்பு குணமாகும்.
· கண்பார்வை தெளிவுபெறும்.
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.