Author Topic: ~ நெல்லை மீன் குழம்பு ~  (Read 317 times)

Offline MysteRy

~ நெல்லை மீன் குழம்பு ~
« on: May 29, 2016, 10:05:39 PM »
நெல்லை மீன் குழம்பு



தேவையான பொருள்கள்:

குழம்பு மீன் – அரைகிலோ
தேங்காய் – 1 மூடி
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய்,உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு
மிளகு,சீரகம் தலா – 1 ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம்,தக்காளி நறுக்கி கொள்ளவும். மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய் ,மிளகு,சீரகம் 2 சின்ன வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதி வெங்காயத்தை போட்டு வதக்கி அதனுடன் தூள்கள் எல்லாவற்றையும் போட்டு வதக்கி தக்காளி புளித்தண்ணீர் அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதித்தவுடன் மீன்களை போடவும்.
மின் வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது கருவேப்பிலை போட்டு மூடி விட்டால் குழம்பு கமகம வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும்.