Author Topic: ~ மூங்தால் பனீர் சப்பாத்தி ~  (Read 376 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227452
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூங்தால் பனீர் சப்பாத்தி



தேவையானவை:

 கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.