Author Topic: ~ பிராமண சமையல்- பருப்பு கத்திரிக்காய் ~  (Read 365 times)

Offline MysteRy

பிராமண சமையல்- பருப்பு கத்திரிக்காய்



துவரம் பருப்பு – ஒரு கப்
பெரிய கத்திரிக்காய் – இரண்டு
வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – கால் மூடி
முந்திரிப்பருப்பு – 20
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிகை
தனியாப் பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகாய் – மூன்று
உப்பு – தேவையானது

கத்தரிக்காயை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி சுமார் ஒன்றரை மணி நேரம் நீரில் ஊறவிடவும்.
பின்னர் பருப்புடன் மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலி அல்லது குழம்பு சட்டியில் எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். சற்று வதங்கிய பின்னர் மசித்த பருப்பை சேர்க்கவும்.
அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, வறுத்த முந்திரிப் பருப்பு, தனியாப் பொடி முதலியவற்றைச் சேர்த்து கிளறி விட்டு வேக விடவும்.
போதுமான தண்ணீர் விட்டுக் கொள்ளவும். காய் நன்கு வெந்து, பருப்பும், மசாலாவும் கலந்து கெட்டியானதும் இறக்கி விடவும்.
எண்ணெய்யை ஒரு மேசைக்கரண்டி விட்டு அதில் கடுகு, பெருங்காயம், மிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து கொட்டவும்.