Author Topic: ~ ஆலு மசாலா! ~  (Read 456 times)

Offline MysteRy

~ ஆலு மசாலா! ~
« on: May 16, 2016, 08:06:02 PM »
ஆலு மசாலா!



தேவையானவை:

 உருளைக் கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
ஆலு மசாலா

செய்முறை:

உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக்
கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!