Author Topic: ~ காளான் மிளகுப் பொரியல் ~  (Read 364 times)

Offline MysteRy

காளான் மிளகுப் பொரியல்



தேவை:

காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் 1 கப், இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் அரை டீஸ்பூன்.
காளான் மிளகுப் பொரியல்

செய்முறை:

 காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு,மஞ்சள்தூள் தூவி வதக்குங்கள். வதங்கியதும் காளானைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி மேலும் மூன்று நிமிடம் கிளறி இறக்குங்கள்.