Author Topic: ~ சத்து நிறைந்த கம்பு கிச்சடி செய்வது எப்படி ~  (Read 340 times)

Offline MysteRy

சத்து நிறைந்த கம்பு கிச்சடி செய்வது எப்படி



தேவையான பொருட்கள் :

கம்பு – அரை கப்
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
பட்டை – ஒரு துண்டு
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உளுந்து – அரை டீஸ்பூன்

காய்கறிகள் :

கேரட் – அரை கப்
பீன்ஸ் – 3
பெங்களூர் தக்காளி – பாதி
தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தவிடு நீக்கப்பட்ட கம்பு (கடையிலேயே தவிடு நீக்கி சுத்தம் செய்த கம்பு கிடைக்கும்) மற்றும் பாசிப்பயறு இரண்டையும் சுமார் இரண்டு மணி நேரம் ஊற விடவும். ஊற வைத்த கம்பு மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து, தண்ணீரை சுத்தமாக வடிகட்டவும்.
* குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் சேர்த்து சீரகம், பட்டை, இஞ்சி, கறிவேப்பிலை, உளுந்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
* இதனுடன் கழுவி வைத்துள்ள கம்பு, பருப்பை வதக்கிய கலவையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக விடவும்.
* குக்கர் சத்தம் அடங்கியவுடன், விசிலை நீக்கி கிச்சடியை நன்கு கலக்கி, பரிமாறவும்.
* சுவையான சத்தான கம்பு கிச்சடி ரெடி.