Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ குழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு ~ (Read 367 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226725
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ குழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு ~
«
on:
May 12, 2016, 10:47:04 PM »
குழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு
பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன.
ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்.
மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சாதாரணமான ஆனால் அதிகளவில் இருக்கும் பிரச்னையாக டையபர் அரிப்பு உள்ளது. அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த வகை அரிப்புகளை காண முடியும்.
இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும். இதன் மூலம் தோலில் மிகவும் குறைவான அளவே சத்து எண்ணெய்கள் உற்பத்தியாகும், அதன் காரணமாக தொற்றுகளிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பும் குறைவாகவே இருக்கும். உங்கள் குழந்தைக்கு டையபர் அரிப்பு வந்துள்ளதை நீங்கள் கண்டறிந்தவுடன் செய்ய வேண்டிய முதல் செயல்பாடு – அந்த இடத்தை ஈரப்பதம் இல்லாமல் காய வைப்பது தான்.
இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிக்கும் போது தான் உங்கள் குழந்தையின் சருமம் அழகாக பராமரிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவவும். இயற்கையான கிருமிநாசினியான தேங்காய் எண்ணெயில் உள்ள மூலப்பொருட்கள் டையபர் அரிப்புகளையும் சரி செய்து விடுகின்றன. ஊங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் மெலிதாக தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள் மற்றும் கை, கால் மடங்கும் இடங்களிலும் மற்றும் பிளவுகளிலும் விரலை வைத்து இதமாக மசாஜ் செய்து விடுங்கள்.
மிகவும் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல் டையபர்களை பயன்படுத்தினால் அரிப்புகள் வரும். எனவே மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.
டையபர் அரிப்பு உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடங்களை சரி செய்ய முடியும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதத்தையும் பாதுகாக்க முடியும். பாதிக்கப்பட்ட இடத்தை காய வைத்து விட்டு, அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். நீங்கள் தடவி விட்ட ஆலிவ் எண்ணெய் ஒரு அடுக்கு போல செயல்பட்டு, தண்ணீர்; சருமத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு ~