Author Topic: ~ பீட்ரூட் உருளைகிழங்கு கட்லெட் ~  (Read 348 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226729
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீட்ரூட் உருளைகிழங்கு கட்லெட்



தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு வேகவைத்து மசித்தது – ஒரு கப்
பீட்ரூட் – அரை கப் (துருவி மிக்ஸியில் மசித்தது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
ரவை – தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் நன்கு மசித்த உருளைகிழங்கு, மசித்த பீட்ரூட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும் தண்ணீர் விடாமல் கெட்டியாக உருட்டி கொள்ளவும்.
சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக மேது வடை போல் தட்டி ரவையில் புரட்டி தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.