Author Topic: பொறாமை என்னும் தீ  (Read 5534 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பொறாமை என்னும் தீ
« on: December 04, 2011, 01:26:18 PM »
Paditha Story
பாரதி உயர் நிலை பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்கத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. எல்லோரும் பரபரப்பாக காணப்பட்டனர். சிவராமன் மாஸ்டரின் கீழ் ஒரு மாணவ மாணவியரின் படையே செயல் பட்டுக்கொண்டு இருந்தது. பட்டுப்பூச்சி வாழ்க்கை சுழற்சி , கடின நீரை குடி நீராக்கும் விதம், மின்னுவியல் விந்தைகள், உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை ஒரு பவர் பாய்ன்ட் படைப்பு என்று அந்த சுத்து வட்டார பள்ளிகளை பொறாமை பட வைக்கும் அளவு மாணவர்களை சிவராமன் தயார் செய்து இருந்தார் . புகைச்சல் வெளியில் மட்டும் இல்லை , பள்ளிக்குள்ளும் இருந்தது

கண்காட்சியில் எப்படியும் சிவராமனை அசிங்கப்படுத்துவதேன்று. இந்த நல் எண்ணம் கொண்ட பிரகஸ்பதிகள் அப்பள்ளியின் தலைமையாசிரியர் வேணுகோபால் , அவர் மகன் சீனு , இன்னும் மூன்று ஆசிரியர்கள்.

நான்கு நாட்கள் முன்பு நடந்த சம்பவம்,

சார் உங்கள ஹெட் மாஸ்டர் கூப்புடுறார் .... பியூன் எழுமலை சொல்லிப்போக சிவராமன் தலைமையாசிரியர்
அறையை நோக்கி போனார்.

வாங்க சிவராமன் பணிகள் எப்படி போகுது ....

சார் சிறப்பா நடக்குது பல மாடல்கள் முடிந்தது . பொறுப்புகளை பிரித்து கொடுத்து இருக்கேன். நாளை இரவுக்குள் எல்லாம் முடிந்திடும்.

ம்ம் நன்றி இப்ப நம்ப கண்காட்சிக்கு குறைந்தபச்ச அனுமதி டிக்கெட் போடலாம் என்று இருக்கேன். ஒரு மாணவருக்கு ஐந்து ரூபாய் . இந்த பொறுப்பும் நீங்கள்தான் செய்யணும் .

சார் இது கல்வி இதை வித்தை போல காட்டி காசு பண்றதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார் சிவராமன்.

இந்தா பாருங்கள் , இந்த கண்காட்சிக்கு எத்தனை செலவு ஆகுது என்று தெரியுமா உங்களுக்கு , நாங்க ஒன்னும்
போது சேவை செய்ய இங்க குடிவரலை . உங்க இஷ்டத்துக்கு வேணும் வேண்டாம் என்று சொல்ல நான் ஒன்னும் உங்க மாணவன் இல்லை , உங்க சீனியர் நான் சொல்லுறதை கேளுங்க.

சிவராமனுக்கு அவர் சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்று புரிந்தது . தலைமை ஆசிரியரின் மகன் கொண்டுவந்து கொடுத்த மாடல் சரியாக இயங்கவில்லை என்ற காரணத்தால் அவனை தகுதி அடிப்படையில் வெளியேற்றினார் . அது இப்போது புகைகிறது . சென்ற ஆண்டு அவருக்கு கிடைத்த நல்லாசிரியர் விருது இவரின் முதல் வெறுப்பு , இரண்டு பேருக்கும் மூன்று மாத பணி இடைவெளிதான் . தலைமை ஆசிரியர் பொறுப்பும் முதலில் சிவராமனுக்கு வந்ததுதான் . ஆனால் மேலிட செல்வாக்கும் பணமும் அந்த பொறுப்பை வேணு பெற்றுக்கொண்டார் . இந்த சூழ்நிலையில் இது ஒரு புது பிரச்சனை எதற்கு என்று மௌனமாக தலையை ஆட்டி வெளி ஏறினார் .


தலைமையாசிரியர் அறையில் சதி திட்டம் துவங்கியது .
சார் இவன்தான் என் தம்பி காலேஜில் இவன் செய்த புராஜெக்ட்ட வச்சு சிவராமன் மானத்தை வாங்கிடுவோம்.
மரகதம் டீச்சர் நீட்டி முழக்கினாள்.

வேணு கோபால் , மரகதம் டீச்சர் , கோமதி டீச்சர் , சொக்கன் ஐயா இந்த நால்வர் கூட்டணி பள்ளி முடிந்தவுடன் கண்காட்சியின் வரவேற்ப்பு அறையின் சிறிய நடைபாதையின் ஒரு குறுகலான இடத்தில் அந்த கருவியை பொருத்தினர் . பின்னர் அதை சில பூத்தொட்டிகளை கொண்டு மறைத்தனர் . அதில் இருந்து ஒரு வயர் இணைப்பு பக்கத்தில் உள்ள ஜன்னல் வழியாக தலைமை ஆசிரியரின் கணினியுடன் இணைக்கப்பட்டது .
அதன் செயல்பாடு சரியாக இயங்குகிறதா என்று இரு முறை பார்த்து விட்டு சென்று விட்டனர் .

சிவராமன் மிக பரபரப்பாக காணப்பட்டார் . அவரின் மிக நம்பிக்கைக்குரிய மாணவிகள் இருவரை கட்டணம் வசூலிக்க முகப்பில் அமர்த்தினார் . நூறு சீட்டுக்கள் கொண்ட கட்டுக்களை மாணவிகளிடம் கடைசி நேரத்தில் கோமதி டீச்சர் கொடுத்து போக ,ஒரே ஆரவாரத்துடன் துவங்கியது கண்காட்சி . எல்லா பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் படை படையாக வந்து குவிந்தனர் . கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்த சொக்கன் ஐயா மகனுக்கு சரியான வசூல் .

சிவராமனுக்கு இதையெல்லாம் கண்டு வெறுப்பாக இருந்தாலும் வந்த மாணவர்களுக்கு விளக்கம் சொல்வதில் மனதின் கவனத்தை திருப்பிக்கொண்டார் . இடையில் சிறப்பு விருந்தினர் தலைமை கல்வி அதிகாரி வருவதையும் உறுதி செய்து கொண்டார் . வாசலில் டிக்கெட்கள் விரைவில் விற்று தீர புதிய டிக்கெட்களை கோமதி டீச்சர் கொடுத்து போய்க்கொண்டு இருந்தார் .

வேணு கோபால் அவரை கூப்பிட்டு என்ன கலந்து தானே கொடுக்குறீன்கள் என்றார் .

கோமதியும் ஆம் என்று தலை ஆட்டி போக

வேணு கோபால் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் .

அன்று மாலை எல்லாம் இனிதாக முடிய சிவராமனை எல்லோரும் பாராட்டி செல்ல வேணுகோபாலின் வயிறில் புகைச்சல் அதிகமானது. மாலையில் கணக்குகள் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போது கணக்கில் குழப்பம் என்று இரு பெண்களும் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

யாரு இவங்க தானா , ஏம்மா இப்படி ஒழுக்கம் இல்லாம நடக்கத்தான் உங்க ஆசிரியர் கத்து கொடுத்தாரா ,
மீதி பணம் எங்கே ஒழுங்கு மரியாதையா சொன்னா வீட்டுக்கு போகலாம் இல்ல இப்படியே இருக்க வேண்டியது தான். வேணுகோபால் மனசாட்ச்சியை அடகு வைத்துவிட்டு வாய்க்கு வந்த படி பேசிக்கொண்டு இருந்தார்.

இந்தா யாரு அங்க ஆபீசுல , போலிசுக்கு போன் போடு இவளுகளை இப்படி கேட்டா சொல்ல மாட்டாளுக ... அடை மொழியுடன் அசிங்கமான வார்த்தைகள்.

கோமதி டீச்சரும் மரகதம் டீச்சரும் பெண்களை புரட்டி எடுத்தனர். தகவல் சிவராமனுக்கு போக பதறிப்போய் ஆபிஸ் ரூம் விரைந்தார்.

போலீசாரும் , சிவராமனும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய , வேணு கோபால் சிவராமனை பார்த்து , வாங்க சார் இதுல உங்களுக்கு எத்தனை பெர்சன்ட் பங்கு, இல்லை சுட்ட பணம் மொத்தமும் உங்க கிட்ட தான் இருக்க. சிவராமனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்க வில்லை.

சார் நாக்குல நரம்பு இல்லாம பேசாதிங்க, உங்களுக்கு என் மேல வெறுப்பு இருந்த என் கிட்ட நேர்ல மோதுங்க அதை விட்டு இப்படி பிள்ளைகளை கேவலப்படுத்தாதிங்க என்றார் சிவராமன்.

யோவ் நீ பெரிய யோக்கியன்தான் போ எனக்கு தெரியாது உன்னை பத்தி ஏக வசனத்தில் வேணுகோபால் பேச இன்ஸ்பெக்டர் அவர்களை இடை மரித்தார்.

ஒரு நிமிஷம் எனக்கு உங்க பிரச்சனை என்ன என்பதை விளக்கமா சொல்லுங்க

சார் கண்காட்சிக்கு டிக்கெட் வசூல் பண்ணதில் பணம் ஆயிர கணக்கில் குறையுது

எல்லாம் இவர் பொறுப்பு எடுத்து செய்ததுதான் இப்ப கேட்ட யோக்கியன் போல பேசுறார் .

இதற்கு இடையில் பள்ளி நிர்வாகிகள் வர விஷயம் எல்லோருக்கும் பரவி அலுவலக வாசலில் ஆசிரியர்கள்
மாணவர்கள் கூட்டமாக கூடி நின்றனர் .

இதற்கு எல்லாம் என்ன ஆதாரம் சிவராமன் கூச்சல் போடா , வேணு சிரித்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது இன்ஸ்பெக்டருக்கு .

வாங்க காட்டுறேன் ... இந்த பாருங்க இது வரும் ஆட்களை கணக்கெடுக்கும் கருவி , இதில் இருந்து வரும் ஓளி இரு முறை தடை பட்டால் என் கணினியில் இருக்கும் மென்பொருளில் ஒரு எண்ணிக்கை கூடும் . இதன் கணக்குப்படி நாலாயிரத்து இருநூத்தி ஒன்பது பேர் வந்து போய் இருக்காங்க . இது ஒரு வழி பாதையா இருந்த காரணத்தாலே உள்ளே போறவங்க எண்ணிக்கை மட்டுமே கணக்கில் வரும்.

வேணு கோபால் பெரிய துப்பறியும் அதிகாரி போல விளக்கி கொண்டு இருந்தார்.

சிவராமன் அழுது அழுது வீங்கிப்போன முகத்துடன் இருந்த அந்த பெண்களின் முகத்தை பார்த்துகொண்டு இருந்தார் . பொறுமை இழந்து சார் இப்ப என்ன சொல்ல வரிங்க அந்த பணத்தில் எத்தனை குறையுது அதை நான் கொடுக்கிறேன் . இந்த பிள்ளைகளை விடுங்க என்றார்.

இன்ஸ்பெக்ட்டர் இடைமறித்து சார் நாங்க வந்த பின்னே நாங்க பார்த்து கொள்கிறோம் கொஞ்சம் என் கூட வாங்க என்று சிவராமனை அழைத்து போய் விசாரித்தார் . அவரிடம் இருவருக்கும் இருக்கும் பனிப்போரட்டத்தை சிவராமன் விளக்க ,

ஒரு முடிவுடன் இன்ஸ்பெக்டர் அந்த கருவியின் முன் நடந்து பார்க்க எண்ணிக்கை சரியாக கூடுவதை குறித்துக்கொண்டார் . பின்னர் டிக்கெட்களை கோமதி டீச்சரிடம் இருந்து வாங்கி எண்ணிக்கைகளை சரி பார்த்தார் . கட்டுக்கு நூறு இருந்தது.


ஏம்மா இந்த கட்டுக்கள் தானா நீங்க கொடுத்தது என்று மாணவிகளிடம் உறுதி செய்து கொண்டார். பள்ளி நிர்வாகிகள் சிவராமனையும் வேணு கோபாலையும் அழைத்து பள்ளியின் மானத்தை காப்பாத்துங்கள் என்று மன்றாடினார் .


எதோ ஒரு யோசனையில் இன்ஸ்பெக்டர் டிக்கெட்களை அலமாரியில் வைக்கும் போது மூலையில் இருந்த
ஒரு வண்ண காகிதக்கட்டு கண்களை உறுத்தியது . அந்த கட்டை அவர் எடுக்க கோமதி வேணுகோபால் இருவரின் முகமும் மாறியது. உள்ளேஅதே போல பல டிக்கெட் கட்டுக்கள். அதில் ஒவ்வொரு கட்டிலும் இருபது சீட்டுக்கள் குறைந்தது .


அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது நடை பாதையில் யாரும் இல்லாத பொழுது கணினியில் வருகை பதிவில் எண்ணிக்கை தானாக கூடிக்கொண்டே போனது. வேணு கோபால் முகம் இன்னும் வெளிறிப்போக அறையின் வெளியே அனைவரும் வர அங்கே இரு பூனை குட்டிகள் அந்த பூந்தொட்டி மேலே ஏறி விளையாடிக்கொண்டு இருந்தது . அவைகள் கருவியின் குறுக்கே பாய்ந்து விளையாடும் போது இங்கே எண்ணிக்கை தாறுமாறாக ஏறிக்கொண்டு இருக்க சிவராமன் முகத்தில் சிரிப்பு முதல் முறையாக.



பள்ளி நிர்வாகிகளை இன்ஸ்பெக்டர் அழைத்து குறைவான சீட்டுக்கள் உள்ள டிக்கெட்டுகளையும் கணினியில் ஏற்ப்பட்ட குழப்பத்தையும் வேணு கோபாலின் பொறாமையையும் விளக்கினார் .


சார் சிவராமன் இந்த பிரச்சனையை பெரிசு பண்ண வேண்டாம் , உங்க பள்ளியின் பேருக்கு களங்கம் வர நாங்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்றார் . ஆனால் இந்த மாணவிகளின் பெற்றோர்கள் முறையீடு செய்தால் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை . பார்த்து நாளைக்கு என்ன முடிவு எடுக்குறீங்க என்று சொல்லி அனுப்புங்க என்று விடை பெற்றார்.


அன்று இரவே கமிட்டி கூடி வேணுகோபால் மற்றும் அவருக்கு துணை இருந்த ஆசிரியர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது . தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு சிவராமன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது .

ஆனால் நாளையை பற்றிய கவலை இல்லாமல் சிவராமன் கடவுளுக்கு நன்றி கூறி விட்டு மொட்டை மாடியில் பாயை உதறிப்போட்டு படுத்தார் .


அவர் கனவில் இரண்டு குட்டி பூனைகள் உள்ளே வெளியே தாவி தாவி எண்ணிக்கைகளை ஐந்து நிமிடத்தில் ஐநூறாக உயர்த்திக்கொண்டு இருந்தது .


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: பொறாமை என்னும் தீ
« Reply #1 on: January 19, 2012, 02:47:03 AM »
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ..... நல்ல கதை