Author Topic: நீ வருவாய் என  (Read 569 times)

Offline thamilan

நீ வருவாய் என
« on: June 04, 2016, 05:59:36 PM »
நீ வந்து போன
இடங்களில் எல்லாம் காத்திருக்கிறேன்
நீ நின்றிருந்த
ரயில் மேடையில் தான்
நான் வாழ்கிறேன்
நீ சிரித்த பிறகு தான் சிரிக்கிறேன்
உன்னோடு மட்டும் தான் பேசுகிறேன்

உன்னைக் கானலாய் கண்டவுடன்
கண் விழிக்கிறேன்
இந்த ரயிலில் வருவாய் என
எல்லா ரயிலையும் பார்த்திருக்கிறேன்

நீ வரும் நேரம் செல்கிறேன்
நீ செல்லும் நேரமும் வருகிறேன்
எப்படியாவது எதிர்படுவாய் என
நீ வரவே இல்லை

ஆனாலும் ஒரு திருப்தி
உன்னைப் போலவே
ஒரு சிறுமி தினமும்

Offline SweeTie

Re: நீ வருவாய் என
« Reply #1 on: June 08, 2016, 12:22:31 AM »
கவிதை  ஏன்  தொடரவில்லை?    முடிவை எதிர்பார்கிறேன்.