Author Topic: ~ உருளைக்கிழங்கு வறுவல் ~  (Read 423 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு வறுவல்



உருளைக்கிழங்கு – 500 கிராம்
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – நான்கு பற்கள்
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கறித்தூள் – 2 தேக்கரண்டி
தேங்காய் பால் அல்லது பசும்பால் – முக்கால் டம்ளர்
எண்ணெய் – நான்கு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 நெட்டு
உப்பு – 2 தேக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு பொரிய விடவும்.
அதன் பின்னர் பூண்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இவை அனைத்தும் வதங்கியதும் நறுக்கின உருளைக்கிழங்கை சேர்த்து கறித்தூள், உப்பு போட்டு பிரட்டி விடவும்.
கறித்தூள், உப்பு சேர்த்து பிரட்டியதும் அதனுடன் பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
பின்னர் வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் மூடியை திறந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்திருக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி விடவும்.
சிறிது நேரம் கழித்து வறுவலாக ஆனதும் இறக்கி பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார். விரும்பினால் பாதி எலுமிச்சைபழ சாறு சேர்க்கலாம்.