Author Topic: ~ பலாக்கொட்டை மசியல் ~  (Read 404 times)

Offline MysteRy

~ பலாக்கொட்டை மசியல் ~
« on: May 02, 2016, 11:14:39 PM »
பலாக்கொட்டை மசியல்



பலாக்கொட்டை – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
தேங்காய்த் துருவல் – கால் கப்
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெள்ளை உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி

பலாக்கொட்டையில் மேலே உள்ள தோலை நீக்கி விட்டு இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டாக நறுக்கிய பலாக்கொட்டையை போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி கொள்ளவும்.
அரைத்த பலாக்கொட்டையுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிசறி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பிசறி வைத்திருக்கும் பலாக்கொட்டை கலவையை அதில் போட்டு ஒரு நிமிடம் கிளறவும். ஒரு நிமிடம் கிளறிய பிறகு இறுதியில் தேங்காய் துருவலை போட்டு கிளறி இறக்கி விடவும்.
சுவையான பலாக்கொட்டை மசியல் தயார். செய்வதற்கு எளிமையான ஒரு பக்க உணவு இது. இதனை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. மீனா அவர்கள்.